லாரி மோதி மின்சார கம்பம் சேதம்.. நூற்று கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் தடை..

கீழக்கரையில் இன்று காலையில் புது கிழக்கு தெரு பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி ஓன்று மின்சார கம்பத்தின் மீது மோதியதால் அக்கம்பம் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் நூற்றுக் கணக்கான வீடுகளுக்கு மின்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சம்பவ இடத்தை பார்வையிட்ட கீழக்கரை நகர் நல சங்க செயலாளர் பசீர் மரைக்கா கூறுகையில், பழுதடைந்த மின்சார கம்பம் மிகவும் மெலிதான தரமற்ற இரும்பு கம்பிகளால் கான்கிரீட் வார்க்கப்பட்டு செய்யப்பட்டுள்ளதால், சாதாராண அதிர்வை கூட தாங்கிக்கொள்ள முடியாத தரத்தில் இருப்பதும் விரைவில் சேதம் அடைவதற்கு காரணம், ஆனால் இதைப்பற்றி மின்சார வாரியத்தில் விசாரித்தால் முறையான பதில் வரவில்லை என்றார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.