Home செய்திகள் *கீழக்கரையில் 18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘கிழக்கு நண்பர்கள்’ அறக்கட்டளை.*

*கீழக்கரையில் 18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘கிழக்கு நண்பர்கள்’ அறக்கட்டளை.*

by ஆசிரியர்

கிழக்குத்தெரு நண்பர்கள் அறக்கட்டளை 2000 வருடம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த கிழக்கு நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள், திருமண உதவிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் அவசர கால உதவிகள் செய்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை அஸர் தொழுகைக்கு பின் 4.30 மணியளவில் கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ப அ. சேகு அபுபக்கர் அவர்களின் தலைமையில் கைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் வைத்து ஜமா அத் நிர்வாகிகள் முன்னிலையில் 16 ஏழைகளுக்கு கனிசமான உதவிகள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் அகமது ஆரிபின், செயளாளர் ஹமீதுல் ஆசிக்கின், பொருளாளர் புஹாரி அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்பட ஜமாஅத்தார்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

அறக்கட்டளை சேவை சம்பந்தமாக கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் முகம்மது அஜீகர் அவர்கள் கூறுகையில், “கிழக்கு தெரு நண்பர்கள் நிதி பங்களிப்புடன் செயல்படும் இந்த அறக்கட்டளை எதிர் வரும் காலங்களில் தன் பணியை மேலும் விரிவு படுத்த உள்ளது. இந்த அறக்கட்டளை வளர்ச்சிக்காக அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!