Home செய்திகள் இராமநாதபுரத்தில் வாகன சோதனை அபராதம் விதிக்க போலீசாருக்கு இ-சலான் உபகரணம்

இராமநாதபுரத்தில் வாகன சோதனை அபராதம் விதிக்க போலீசாருக்கு இ-சலான் உபகரணம்

by mohan

தமிழகம் முழுவதும் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு காவல் துறை பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் வாகன சோதனைகள் மூலம் வாகன விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது விதிக்கப்படும் அபராத தொகையை காவல் துறையினர் வசூலிப்பதில் சிரமம் உள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக வாகன சோதனையில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகள் நேரடியாக பணம் பெறாமல் இ-சலான் முறையில் ஏடிஎம், பேடிஎம், கிரிடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் 13 காவல் நிலையங்களுக்கு இ-சலான் முறையில் பணம் செலுத்தும் உபகரணம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புறநகர் பணி மனை முன் நடந்த நிகழ்ச்சியில் இ – சலான் மூலம் பணம் செலுத்தும் உபகரண செயலாக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆல்ட்ரின், காவல் ஆய்வாளர்கள் சுந்தராம்பாள், தனபால், பிரபு ஆகியோருக்கு இ-சலான் உபகரணம் வழங்கப்பட்டது. உபகரணம் மூலம் அபராதம் விதிப்பு, மோட்டார் வாகன வழக்குகள் பதிவு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!