Home செய்திகள் துபாய் கடலில் இறந்த மீனவரின் தாயாருக்கு பாதுகாப்பு கோரி போராட்டம்

துபாய் கடலில் இறந்த மீனவரின் தாயாருக்கு பாதுகாப்பு கோரி போராட்டம்

by mohan

இராமேஸ்வரம் ராமகிருஷ்ணாபுரம் மீனவர் காலனியை சேர்ந்த நம்புவேல் மகன் முருகன். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீன்பிடி ஒப்பந்த கூலியாக துபாய் நாட்டில் அமேரியா பகுதிக்கு சென்றார்.துபாய் அமேரியா கடல் பகுதியில் 2.12.2017 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்துவிட்டார். இரண்டு மணி நேர தேடலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப் பட்டு பிரேத பரிசோதனைக்காக துபாய் குபத் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது . நம்புமுருகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக் கோரி அவரது தாயார் முனியம்மாள் 4.12.2017 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், இராமேஸ்வரம் மீன் துறை இயக்குனர் ஆகியோருக்கு மனு கொடுத்தார். மத்திய, மாநில அரசுகள் அவரது உடலை கொண்டுவர எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இறந்த மீனவரின் இறப்புச் சான்று, பிணக் கூராய்வு சான்று ஆவணங்களை கூட பெற்றுத்தரவில்லை.இதனால் நம்பு முருகனின் தாயார் முனியம்மாள் (69) அரசு எவ்வித நிவாணரம் பெற முடியாமல் அலைந்து வருகிறார்.இந்நிலையில் நம்பு முருகன் வெளிநாடு செல்ல கந்து வட்டிக்கு பணம் வாங்கி சென்றுள்ளார்.துபாய் சென்று அவர் தொழில் செய்த காலத்தில் அனுப்பிய பணம் முழுவதும் அவரது தாயார் கந்துவட்டி கும்பலுக்கே கொடுத்து விட்டார். அசல் தொகையை விட பன்மடங்கு வட்டி, பெற்றுக்கொண்ட கந்துவட்டி கும்பல், முனியம்மாளை தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டி வருகின்றனர், கடந்த 27.8.2019 அன்று கந்துவட்டி கும்பல் இராமகிருஷ்ணாபுரம் மீனவர் காலனி நம்புமுருகன் வீடு சென்று வீட்டை காலி செய்யக் கோரி முனியம்மாளை மிரட்டினர்.இதுகுறித்து 28.8.2019 அன்று தனுஷ்கோடி காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார் செய்து 30.8.2019 அன்று விசாரித்தனர், விசாரணையின் போது சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் கந்துவட்டி கும்பலுக்கு சாதகமாக பேசினர்.காவல் நிலையத்திற்கு உள்ளே, முனியம்மாளை கந்துவட்டி கும்பல் மிரட்டியுள்ளனர்.தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் நம்பு முருகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து,கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து முனியம்மாளை பாதுகாக்க தவறிய தனுஷ்கோடி காவல் நிலையத்தை கண்டித்து,இன்று ( 3.9.2019) அன்று முனியம்மாளை “தமிழக அரசிடம் ஒப்படைக்கும்” போராட்டம். இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முனியம்மாளுக்கு அரசு கிடைக்கவும், அவரது மகன் நம்பு முருகன் இறப்பு சான்று கிடைக்க நடவடிக்கை கோரி வட்டாட்சியர் ஜபாரிடம் மனு கொடுத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!