
காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய தரை வழி சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள ஒரு கடிதத்தில், வாகனங்களுக்கான ஃபிட்னஸ், ஓட்டுநர் உரிமம், பெர்மிட், வாகனப்பதிவு மற்றும் வாகனங்கள் தொடர்பான அனை த்து ஆவணங்களும் இதில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த உரிமங்கள், முதற்கட்டமாக ஜூன் வரையும், அதன் பிறகு செப்டம்பர் இறுதி வரையும் ஏற்கனவே, கால அவகாசம் நீட்டிக் கப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வாகன ஓட்டுநர்களுக் கும், பொதுமக்களுக்கும் எவ்வித பிரச்சினையும் உருவாகாமல் நடவடிக் கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.