
கீழக்கரை கடற்கரையில் வெளியூர் சுற்றால பயணிகளை கவரும் வகையில் நடைபாதை அமைக்க அடிக்கல் விழா அமைச்சர் மணிகண்டன் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதற்கான பணிகளும் துரிதமாக ஆரம்பமானது.
இந்நிலையில் நடைபாதை அமைக்கும் இடத்தில் கழிவுநீர் கலக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி அதை முறையான கழிவு நீர் மேலான்மை திட்டம் ( Waste Water Management) அமைத்து சீர் செய்தால், உள்ளூர்வாசிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும், அதே சமயம் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்ற கருத்து வலுத்து வருகிறது.
இது சம்பந்தமாக நிஷா ஃபவுண்டேஷன் சேர்மன் கூறுகையில், தமிழக அரசு முயற்சி செய்து வரும் நடைபாதை அமைக்கும் திட்டம் மிகவும் வரவேற்கதக்கது. அதே சமயம் கலங்கரைவிளக்கம் சுவரை ஒட்டி வற்றாத ஜீவநதியாக வந்து கலக்கும் சாக்கடை நீர், துர்நாற்றத்தையும், வரும் சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்கும் வகையில் அமைந்து உள்ளது, ஆகையால் மத்திய, மாநில அரசாங்கம் நிரந்தர தீர்வு காணும்பட்சத்தில், நடைபாதை அமைப்பதற்கான நோக்கமும் நிறைவேறும், இப்பகுதியும் சுகாதாரத்தன்மை அடையும் என்றார்.
மத்திய, மாநில அரசு மக்களின் குரலுக்கு செவி கொடுக்குமா??
You must be logged in to post a comment.