Home செய்திகள் தமிழ் சமுதாயத்துக்கே பெருமை சேர்க்கும் டாக்டர். முஹம்மது ரிலா..! 🌹

தமிழ் சமுதாயத்துக்கே பெருமை சேர்க்கும் டாக்டர். முஹம்மது ரிலா..! 🌹

by ஆசிரியர்

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் “ஆயிரமானாலும் மாயவரம் ஆகாது” என்று புகழப்படும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிளியனூர் எனும் ஊரில் பிறந்து கடல் கடந்து லண்டன் மாநகர் வரை சென்று சாதித்து கொண்டிருப்பவர் டாக்டர்.முஹம்மது ரிலா.

மெட்ராஸ் (சென்னை) ‘கலா சேஷ்டிரா’வில் தனது பள்ளி படிப்பை முடித்து, 1980 ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் MBBS-ஐயும் அத்துடன் மேற்படிப்பான MS படிப்பையும் முடித்தார். 1986-ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று எடின்பர்க்’கில் மற்றுமொரு MS படிப்பை முடித்தார். FRCS மேற்படிப்பை அமெரிக்காவில் மேற்கொண்டு முடித்தார்.

அடுத்து 1988 ஆம் ஆண்டில் Fellow of the Royal College of Surgeons மற்றும் 1991 ஆம் ஆண்டு முதல் உலக புகழ் பெற்ற லண்டன் King’s College ஹாஸ்பிடலில் தனது கல்லீரல் மாற்று மருத்துவ சேவையை தொடர்கிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே இவருக்குத்தான் முதலிடம்…!

1997 ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களேயான பச்சிளம் குழந்தை Baebhen Schutkke-க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை இறையருளால் வெற்றிகரமாக செய்து சாதித்தார். அதன் மூலம் உலக பிரசித்திப் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் சாதனை மனிதராக இடம் பிடித்துவிட்டார். சாதனையென்றால் இதுவல்லவோ சாதனை….!

அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அக்குழந்தை இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஐயர்லேண்ட்டில் சட்ட கல்லூரியில் மாணவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன)

அத்துடன் ஆரோக்கியமான நிலையில் உள்ள கல்லீரலை எவ்வாறு இரு நோயாளிகளுக்கு பிரித்து வழங்கி அவர்களின் உயிர்களை காப்பது என்று புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி அதற்காக வேண்டி நூற்றிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி நவீன மருத்துவ உலகத்திற்கு சமர்ப்பித்திருக்கிறார்.

அதோடு தன்னுடைய ஆயிரமாவது கல்லீரல் அறுவைசிகிச்சையை நிறைவு செய்து சாதித்ததால் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மிக சிறப்பான பாராட்டு விழா சென்னை ITC CHOLA GRAND ஹோட்டலில் நடைபெற்றது! அதில் தமிழக ஆளுநர், துணை குடியரசு தலைவர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

2006ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பிரமோத் மஹாஜன் தன் சகோதரரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கல்லீரல் சிதைந்த நிலையில் டாக்டர்.முஹம்மது ரிலா லண்டனிலிருந்து அறுவை சிகிச்சை அளிக்க முன் வந்த நிகழ்வும் குறிப்பிடத்தக்கதாகும்.

டாக்டர் ரிலா ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 12 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாகவே செய்து தர முன்வந்துள்ளார்.

சிறுவயது முதலே அடக்கமும் அன்பும் கொண்ட பண்புமிக்க மனிதராக, மனிதம் நேசிப்பவராக, அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பு பாரட்டுபவராக விளங்கிய டாக்டர்.முஹம்மது ரிலா அவர்கள் தனது மருத்துவ சேவையால் உயர்ந்து நிற்பது இந்தியராகவும் தமிழராகவும் நம் யாவருக்கும் பெருமை.

ஆக்கம். குவைத்திலிருந்து சம்சுல் ஹமீது

EID MUBARAK

You may also like

1 comment

Jamaludeen January 20, 2018 - 3:20 pm

Happy to know about your work
Good job..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com