எதிர்ப்பு தெரிவித்தாலும்.. கட்சி மரியாதை காத்த கீழக்கரை திமுக நகரச் செயலாளர்..

கடந்த வாரம் திமுக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் நியமனம் செய்யப்பட்டார்.  இவருடைய நியமனத்திற்கு பல தரப்பில் வாழ்த்துக்கள் குவிந்தாலும், சில அதிருப்தி அலைகளும் வீசியது, அந்த அலை கீழக்கரையையும் விட்டு விடவில்லை.

இந்நிலையில் இன்று கீழக்கரை நகர செயலாளர் பசீர் தலைமையில் பல திமுக நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்ட இராமநாதபுர மாவட்ட செயலாளரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.