Home செய்திகள் தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொ.ம.தே.க.,வுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு..

தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொ.ம.தே.க.,வுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு..

by Askar

தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொ.ம.தே.க.,வுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொய்தீன் கூறியதாவது: தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடம் கேட்டிருந்தோம். தற்போது மக்களவை தேர்தல் தொடர்பாக மட்டுமே பேச்சு என்று தி.மு.க கூறி உள்ளது. கட்சியின் சார்பில் நவாஸ் கனி மீண்டும் வேட்பாளராக களம் காண இருக்கிறார். ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளோம். என கூறினார்.

கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை தி.மு.க., கூட்டணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:கொங்கு மக்கள் தேசிய கட்சி 2019 ம் ஆண்டை போல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியி்டும் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி வாகை சூடும். தி.மு.க ,கொ.ம.தே.க கூட்டணி உறுதியான கூட்டணியாக இருக்கும். கூட்டணி கட்சிகள் விரைவில் தேர்தல் பணிகளில் ஈடுபடும். கொ.ம.தே.க,வின் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூட்டம் நடத்தி அறிவிக்கப்படும். புதிய முகத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அதன் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குமக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை தி.முக. கூட்டணி ஒதுக்கி உள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் ஸ்டாலின், காதர்மொய்தீன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com