அதிமுக சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாடத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் பழனி நகர மற்றும் நெய்க்காரப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் தன் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பழனி நகர அதிமுக கழகம் சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவலங்களை கோஷங்களாக எழுப்பி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அதேபோல நெய்க்காரப்பட்டி பேரூர் அதிமுக கழக செயலாளர் விஜய் சேகர் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் முன்னாள் எம்பி குமாரசாமி , முன்னாள் எம்எல்ஏ குப்புசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் அசோக், மீனவரணி மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் எம்ஜிஆர் கருப்புசாமி ,அன்வர்தின் பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.