மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..

மதுரையில் மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்துள்ளார். மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அபிஷோசுவா வயது 4. இவர் சம்பவதன்று வீட்டின் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக திடீரென மாடியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமுற்று, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே, இறந்துள்ளார். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இது குறித்து செல்லூர் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்