இராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்லூரி 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா..வீடியோ..

இராமநாதபுரம் சி.எஸ்.ஐ., பி.எட்., கல்லூரி 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு  மதுரை  முகவை பேராயர் முனைவர் எம்.ஜோசப் தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ சினோடு பெல்லோஷிப் துணை தலைவர் லீலா மனோகரி ஜோசப் முன்னிலை வகித்தார்.

பல்கலைகழகம் அளவில் ரேங்க் எடுத்த மாணவி பர்ஸானாவுக்கு ரொக்க பரிசு மற்றும் 77 பேருக்கு மதுரை மண்டல இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை (இக்னோ) இயக்குனர் எஸ். மோகனன் பட்டம் வழங்கினார். கல்லூரி இயக்குநர் கேப்ரியல், தாளாளரும், சி எஸ் ஐ திருமண்டில சட்ட ஆலோசகர் மனோகர மார்ட்டின், முதல்வர் டோலா ரோஸ் மேரி. துணை முதல்வர் ஆனந்த், சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன், தலைமை ஆசிரியர் பால் மாறன் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.