Home செய்திகள் பார்த்திபனூர் அருகே தாய், தந்தையை விஷம் வைத்துக் கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பார்த்திபனூர் அருகே தாய், தந்தையை விஷம் வைத்துக் கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 38. இவர் தனது மனைவியுடன் மும்பை சென்று, அங்கு கடை வைத்து தொழில் நடத்தினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தனது கிராமத்திற்கு குடும்பத்துடன் திரும்பினார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த ராமச்சந்திரன், தந்தை நடராஜன், தாய் கருப்பாயிடம் மனைவியை சேர்த்து வைக்க கூறினார். அதற்கு பெற்றோர் ஆர்வம் காட்டாததால், அவர்களை கொலை செய்யும் நோக்கில் கடந்த 01.3.2018 இரவு வீட்டில் பழைய சோற்றில் பூச்சி மருந்து விஷத்தை கலந்து வைத்தார். 02.3.2018 ஆம் தேதி காலை பழைய சோற்றை சாப்பிட்டுவிட்டு வயலுக்குச் சென்ற தாய் கருப்பாயி 60, அங்கு மயங்கி விழுந்து, வீட்டில் சோற்றை சாப்பிட்ட தந்தை நடராஜன் 65, வீட்டில் மயங்கி விழுந்து இறந்தனர். பிரேத பரிசோதனை செய்ததில் விஷம் வைத்து பெற்றோரை ராமச்சந்திரன் கொலை செய்தது தெரிந்தது.ராமச்சந்திரன் தம்பி குமார் புகார் படி ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று நடந்த இறுதி விசாரணையில்பெற்றோரை கொலை செய்த ராமச்சந்திரனுக்குமுதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம்இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனைவிதித்து தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் கே.என்.கருணாகரன் இவ்வழக்கில் ஆஜரானார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!