Home செய்திகள்உலக செய்திகள் மறைந்த ஜனாதிபதியையும் சிறப்பு விருந்தினராக சித்தரித்த ஊடகங்கள்… நிர்வாணமாக மக்கள் மத்தியில் அலையும் ஆசாமிகளை மறந்து ஒழுக்கத்துடன் இருப்பவர்களை நிர்வாணமாக்கிய ஊடகங்கள்.. வெறுப்புணர்வுக்கு எல்லை இல்லையா??.. அமீரக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கண்டனம்…

மறைந்த ஜனாதிபதியையும் சிறப்பு விருந்தினராக சித்தரித்த ஊடகங்கள்… நிர்வாணமாக மக்கள் மத்தியில் அலையும் ஆசாமிகளை மறந்து ஒழுக்கத்துடன் இருப்பவர்களை நிர்வாணமாக்கிய ஊடகங்கள்.. வெறுப்புணர்வுக்கு எல்லை இல்லையா??.. அமீரக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கண்டனம்…

by ஆசிரியர்

கொரொனோ வைரஸ் எனும் கொடிய நோய் சீனாவில் தொடங்கி ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என்று கடந்து இன்று இந்தியாவையும் ஆட் கொண்டுள்ளது.  ஒவ்வொரு நாடுகளும் சாதி, மதம், நிறம் தாண்டி தன் நாட்டு மக்களை எப்படி காப்பற்றலாம் என்ற சிந்தனையில் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் ஊடகங்களும் மத வெறி பிடித்தவர்களும் கொரோனோவுக்கும் மத சாயம் பூச வேகமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  இது சம்பந்தமாக சமூக வலைதளத்தில் ஒரு இளைஞர் கீழ் கண்டவாறு பதிந்துள்ளார், மிகவும் சிந்திக்க தூண்டும் வரிகள்:-

கொரோனோ கிருமிக்கு ஜாதி, மதம் எதுவும் கிடையாது, அது ஒரு தொற்று நோய். இதற்கு மத சாயம் பூச முனைய நினைப்பவர்கள்,   எந்த ஒரு கொடியவனும் தன் குடும்பத்தை முழுவதையும் அழித்து, பிறருக்கு நோயை பரவ விட நினைக்க மாட்டான் என்ற அடிப்படை விசயத்தை கூட புரிந்து கொள்ள திராணியற்றவர்கள்.

அதே போல் பிரபலமான செய்தி ஊடகம் ஒன்று பல வருடங்களுக்கு முன்பு இறந்து போன முன்னாள் ஜனாதிபதி தப்லீக் ஜமாத்தின் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்று விஷத்தை கக்கியுள்ளது. இது சம்பந்தமாக அமீரக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கீழை ஜமீல் கூறுகையில், “இந்திய மக்கள் அந்த கொடிய வைரஸ் பயத்தில் தினம் தினம் செத்து மடிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் ஜனநாயகத்தின் நான்காம் தூண் என கருதக்கூடிய ஊடகங்களே மக்களிடம் உண்மைக்கு புறம்பாக தவறான விசயங்களை பரப்பி வழி கெடுப்பது மிகவும் வேதனையான விசயம். இந்தியாவில் எத்தனையோ வழி முறைகளில் கொரோனோ கிருமி பரவி கொண்டிருக்கும் வேளையில், ஊடகங்கள் அனைத்தும் கைகோர்த்து இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான தப்லீக் ஜமாத் மூலமாக மட்டுமே நாட்டில் வைரஸ் பரவுவது போல் ஒரு மாயையை உருவாக்குவதும், நிர்வாண சாமியார்கள் என ஊருக்கு நடுவில் வலம் வரும் ஆசாமிகளை அடையாளம் காண முடியாத ஊடகங்கள், ஒழுக்கத்தின் அடையாளமாக திரிபவர்களை, ஆதாரமில்லாமல் நிர்வாணமாக திரிகிறார்கள் என்று மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது.  இதுவரை அமைதி காத்த ஆட்சியாளர்கள் இனியும் அமைதி காக்காமல், உடனடியாக மக்கள் மத்தியில் பயத்தை நீக்கி அமைதியை நிலை நாட்ட வேண்டும், இல்லையென்றால் இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் ஆட்சியாளர்களே பொறுப்பாளி ஆவார்கள்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!