Home செய்திகள் உயிரிழந்தோரின் அடக்க ஆராதனை; சோகத்தில் மூழ்கியது நீர்கொழும்பு..!

உயிரிழந்தோரின் அடக்க ஆராதனை; சோகத்தில் மூழ்கியது நீர்கொழும்பு..!

by ஆசிரியர்

நீர்கொழும்பு புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள், அதே தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாக கடைப்பிடிக்கப்படும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் போன்றவைகளில் கடந்த 21ம் தேதி காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்த மூன்று தேவாலயங்களிலும் தற்கொலை குண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இதையடுத்து, நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பெரி, சினமன் கிராண்ட், ஷங்ரி-லா மற்றும் குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில் 310 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள், அதே தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர், அவர்களின் உடல்கள் வரிசையாக எடுத்துச் செல்லப்பட்டு, கல்லறை தோட்டத்தில் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது.

இதில், உயிரிழந்தோரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு, உயிரிழந்தோருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதன்போது, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!