தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரைப்படம் பணி ஆட்சியர் துவக்கி வைத்தார்..

தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மின்னணு வாகனத்தின் மூலம் மக்களிடம்  தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்  பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  துவக்கி வைத்தார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி யும் நடைபெற்றது இதில் தேர்தலில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்தகொள்ளும் வகையில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து  பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.  

பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில்  இந்திய தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்டங்களாக தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம்  பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்குகளை 7 வினாடிகள் பார்த்து அவர்களே உறுதி செய்யும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம்  குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நடைபெற உள்ள தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான சாய்வுதளம் வசதிகள்,சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது. இதுவரை நமது மாவட்டத்தில் சுமார் 11,000 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளார்கள். இவர்கள் எந்தவிதமான மாற்றுத்திறன் கொண்டவர்கள் என்பதையும், எந்த வாக்குசாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளார்கள் என்பதையும் கணக்கெடுக்கப்பட்டு,அவர்களுக்கு வாக்குசாவடி மையங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் , மாவட்ட வருவாய் அலுவலர்  மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்யத் முகம்மது  ஆகியோர் கலந்து கொண்டனர்