ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்திடலாம்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 01.06.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை அதிகளவில் புதிய வாக்காளர்களாக சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

​அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 01.01.2017 ஆம் நாளில் தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பாக 09-07-2017 மற்றும் 23-07-2017 ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ‘வாக்காளர் சிறப்பு முகாம்கள்” நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் அந்நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களைப் பெறுவார்கள்.

​18 வயது பூர்த்தியடைந்து விடுபட்ட இளைய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள ஏதுவாகää வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்திலும்ää அஞ்சல் மூலமும் தேசிய வாக்காளர் சேவை மையம்” (NVSP – National Voters Service Portal) , இணையதளத்திலும் தேர்தல் ஆணைய www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் அரசு பொது சேவை மையத்திலும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம்.

​வாக்காளர் தங்களின் பெயர்ää முகவரிää புகைப்படம் அனைத்தையும் சரிபார்க்க ஏதுவாக 05.01.2017 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

​18-19 வயது நிரம்பிய விடுபட்ட வாக்காளர் சேர்க்கைக்காக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 01.07.2017 முதல் 31.07.2017 வரையிலான காலத்தில் (சிறப்பு முகாம் நாட்கள் தவிர) நேரில் சென்று தகுதியுள்ள நபர்களிடமிருந்து படிவம் 6-ஐ விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளமான www,eci.hic.in மொபைல் செயலியினைப் பயன்படுத்தி சேர்ப்பதற்கும் வாக்காளர் தங்களின் வாக்காளர் அட்டையின் விபரங்கள் அறிய ஏதுவாக தேசிய தகவல் மையம் NationalContactCentre மூலம் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1950-ஐ பயன்படுத்தி அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்வதற்கும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1950-ஐ தொடர்புகொண்டு தகவல் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி இல்லத்திற்கு சென்று தேவையான விவரங்களைப் பெறுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

​இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இளம் வாக்காளர்கள் அனைவரும் தீவிர வாக்காளர் சேர்க்கை மற்றும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தங்களை புதிய வாக்காளர்களாக வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

​இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.சேதுமாதவன், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, தேர்தல் வட்டாட்சியர் நித்யானந்தம் உள்பட அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.