கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் அறிமுகம்..
கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா. ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு பொருட்களின் விலையில் மூன்று பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். இத்திட்டமானது கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் கண்கவர் வண்ணங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் இடம் பெற்று உள்ளன. ஆகவே வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறுமாறும், இத்திட்டமானது மார்ச் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா. ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.