Home செய்திகள் சின்ன சேலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

சின்ன சேலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

by mohan

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்த துண்டு பிரசுர விழிப்புணர்வு நிகழ்வு 19.09.19 இன்று பிற்பகல் சின்ன சேலத்தில் நடைபெற்றது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் நகர காய்கறி வார சந்தையில் இருந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2020 தொடர்பாக மாவட்ட ஆட்சியர்ல் வழங்கபட்ட துண்டு பிரசுரத்தை சின்னசேலம் தேர்தல் துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன் முன்னிலையில் சின்னசேலம் வட்ட அலுவலக தேர்தல் பிரிவு உதவியாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வகுமார்,  தோப்புகாரன் மற்றும் கிராம உதவியாளர் வேலுமணி ஆகியோரால் வழங்கப்பட்டு சிறப்பு சுருக்க திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள், வாக்காளர்கள் பயன்பெற்றனர்.

செய்தியாளர்      அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com