மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அய்யனார்கோவில் அணை., சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணையின் மூலம் எம்.கல்லுப்பட்டி, எம்.பெருமாள்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையையும், விவசாய பாசனத்திற்கும் பயனடைந்து வரும் இந்த அணையை பராமரிப்பு செய்யவும், சிதிலமடைந்து காணப்படும் மதகு பகுதியை சரி செய்ய கோரி விவசாயிகள் தொடர்ந்த அரசு அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.,இந்நிலையில் எம்.கல்லுப்பட்டி பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.இதில் அணை பராமரிப்பின்றி இருப்பதால் மழை நீர் வீணாகி வயல் வெளியில் புகுந்தது.இதனால் அணையை பராமரிப்பு செய்து சிதிலமடைந்து காணப்படும் மதகு பகுதியை சரி செய்ய கோரி எம்.கல்லுப்பட்டி கிராமமக்கள் 2வது நாளாக இன்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த எம்.கல்லுப்பட்டி போலிசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உசிலை மோகன் 79
You must be logged in to post a comment.