விழிப்புணர்வு பதிவு – ஒரு முக்கிய அறிவிப்பு 2018 பிறப்பு சான்றிதழ் வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது…

01.01.2018 முதல் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது நாம் அறிந்த விசயம், ஆனால் இந்த வருடம்  அதன் சட்ட திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய வழிமுறையின் படி 01.01.2018 முதல் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற PIC ME ID மற்றும் RCH NO ஐ நாம் ஆரம்ப சுகாதார நிலயத்தில் அல்லது அரசு மருத்துவ மணையிலோ அல்லது 102 என்ற இலவச எண்ணிற்க்கு போன் செய்தோ அந்த நம்பரை பெற்று பிரசவம் பார்க்கும் மருத்துவமணையில் கொடுத்தால் மட்டுமே பிறந்த பதிவு Birth Certificate கிடைக்கும்.

இதன் முழு விளக்கமும் ஆஸ்பத்திரியிலோ ஆரம்ப சுகாதார நிலையத்திலோ மக்களுக்கு தெரிவிக்காமல் பிறந்த பதிவுக்கு PIC ME ID, RCH NO அவசியம் என்று சுருக்கமாக எழுதி இருக்கிறார்கள்.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் 2018ம் வருடத்திலிருந்து தான் இந்த நடைமுறை இருக்கிறது என்பதால் 2018ம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைக்கு பிறந்த பதிவு எடுக்க ஆஸ்பத்திரியில் PIC ME ID, RCH NO கேட்கிறார்கள். இப்பொழுது நாம் ஆரம்ப சுகாதார நிலையமான (பால்வாடி) யில் PIC ME ID, RCH NO கேட்டால். அதற்கவர்கள் ஆறுமாதத்திற்கு முன் நாங்கள் இதைப் பற்றி அறிவித்தோம் என கூற வாய்ப்புள்ளது. அப்பொழுது பதிவு செய்யாமல் விட்டவர்களுக்கு PIC ME ID, RCH NO வழங்க எங்களால் வழங்க இயலாது என கூற வாய்ப்புள்ளது. PIC ME ID, RCH NO இருந்தால் மட்டுமே ஆஸ்பத்திரியில் பிறப்பு பதிவதாக சொல்கிறார்கள்.

எனவே நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண்பதோடு இனி வரும் காலங்களில் தாய்மார்கள் கருவுற்ற 45 வது நாளிலோ அல்லது ஆறாவது மாதத்திலோ அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலயத்தில் (பால்வாடி) யில் பதிவு செய்து அட்டையை பெற்று மாதம் மாதம் செக்கப் செய்தால் (நாம் தனியார் ஆஸ்பத்திரியில் செக்கப் செய்தாலும்) அரசாங்க சலுகைகள் நம் பேங்கு அக்கவுன்டுக்கு வருவதோடு PIC ME ID, RCH NO யும் நாம் இலகுவாக பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்

பேங்கு பாஸ் புக் நகல் 1 போட்டோ 2 ஆதார் நகல் 1

அ.சா.அலாவுதீன் – மூத்த நிருபர், கீழை நியூஸ்

#Paid Promotion