வள்ளல் சீதக்காதி சாலையில் இனியதோர் உதயம் – ‘பெஸ்ட் பேக்கரி’ இனிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கிரவுன் ஐஸ் கம்பெனி அருகாமையில் வடக்குத் தெருவை சேர்ந்த ‘மூன் மார்ட்’ கானா சீனா பிரதர்ஸ் நண்பர்களுடன் இணைந்து புதிதாக ‘பெஸ்ட் பேக்கரி’ என்கிற பெயரில் இனிப்பகம் திறந்துள்ளனர்.

இந்த இனிப்பான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன் தினம் 27.04.17 காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இனிப்பகத்தை மேலத் தெரு அலாவுதீன் ஹாஜியார் திறந்து வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

பெஸ்ட் பேக்கரி நிறுவனத்தாரின் வியாபாரம் செழிக்க கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.