கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் சுவைமிகு உணவுகளின் சங்கமம் – ஆயிஷா எமிரேட்ஸ் ரெஸ்டாரெண்ட் & கேட்டரிங்

கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர் அஹமது ஜலீல், கீழக்கரை – ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகாமையில் ‘ஆயிஷா எமிரேட்ஸ் ரெஸ்டாரெண்ட் & கேட்டரிங்’ என்ற பெயரில் புதிய சைவ மற்றும் அசைவ உணவகம் ஒன்றினை துவங்கி உள்ளார். கடந்த 24.03.17 அன்று திறப்பு விழா கண்ட இந்த உணவகத்தின் சிறப்பம்சமாக, அசைவப் பிரியர்கள் மனம் மகிழும் வகையில் சுவை மிகுந்த அனைத்து அசைவ உணவு வகைகளும் பரிமாறப்படுகிறது.

அதே போல் சைவ உணவு வகைகளும் தாராளமாக கிடைக்கிறது. இதனால் கீழக்கரை நகரில் இருந்து தினமும் நண்பர்கள் கூட்டம், இங்கு நாவிற்கினிய வகையில் கனிவுடன் பரிமாறப்படும் அசைவ உணவு வகைகளை சுவைக்க அலை மோதுகிறது. அது மட்டுமல்லாது கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும் மக்கள் இங்கு உணவருந்தி விட்டு மனமகிழ்வுடன் செல்கின்றனர்.

தென்னை மரங்கள் நிறைந்த தோட்டங்கள் இந்த உணவகத்தின் அருகாயில் அமைந்திருப்பதால், இங்கு வருகை தரும் மக்கள் காற்றோட்டமாக அமர்ந்து, இயற்கை சூழலில் பசியாறும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, தனி அறைக்குள் குடும்பத்தாருடன் அமர்ந்து சாப்பிடும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இங்கு திறமையான சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைக்கப்படும் அனைத்து உணவு வகைகளும், கீழக்கரை நண்பர்களால் சுடச் சுட சுவைக்கப்படுகிறது.

இது குறித்து ஆயிஷா எமிரேட்ஸ் ரெஸ்டாரெண்ட் & கேட்டரிங் உணவகத்தின் உரிமையாளர் அஹமது ஜலீல் கூறுகையில், ”நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய் உள்ளிட வளைகுடா நாடுகளில் சொந்தமாக BEST STAR TOURISM LLC., என்கிற பெயரில் சுற்றுலா துறை சம்பந்தமான தொழில் செய்து வருகிறேன். வெளிநாட்டில் தொழில் செய்தாலும் கூட சொந்த மண்ணில், உள்ளூரில் தொழில் துவங்க வேண்டும் என்ற பேராவலில் கடந்த மாதம் இந்த உணவகத்தை, கீழக்கரை மக்களின் பேராதரவோடு துவங்கி இருக்கிறேன்.

எங்களிடம் ஹலால் முறையிலான வகையில் சமைக்கப்பட்ட சுவைமிக்க நான்வெஜ் உணவு வகைகள் உங்கள் மனதிற்கு பிடித்த வகையில் உடனுக்குடன் சமைத்து தருகிறோம். சுகாதரமான சமையல் கூடம், காற்றோட்டமிக்க டைனிங் ஹால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி என அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது. அனைவரும் எங்கள் உணவகத்திற்கு வந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆயிஷா எமிரேட்ஸ் ரெஸ்டாரெண்ட் & கேட்டரிங் நிறுவனத்தாரின் வியாபாரம் செழிக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.