இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இன்று (25/10/2020) ஏர்வாடி கல்வி தர்ம அறக்கட்டளை(EECT Trust) மற்றும் இக்ரா ஐ.ஏ.எஸ் அகடமி சார்பில் அரசு போட்டி தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இன்று (25/10/2020) ஏர்வாடி கல்வி தர்ம அறக்கட்டளை(EECT Trust) மற்றும் இக்ரா ஐ.ஏ.எஸ் அகடமி சார்பில் ஏர்வாடி அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ குத்பா பள்ளிவாசல் வளாகத்தில்  அரசு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில்  நூற்றுக்கணக்கான மாணவர்களும்  மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்சியில் சிறப்பு பேச்சாளர்களாக இக்ரா ஐ.ஏ.எஸ் அகடமியில் இருந்து அக்பர், யாசர் அரபாத், மஹாதிர் ஆகிய மூவரும்  அரசு போட்டித்தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார்கள், சமிஹா பாத்திமா ருக்னுதீன்(Child Development project officer, Karur, Government of Tamil Nadu) ஆகியோர் பெண்கள் கல்வி மற்றும் அரசுத்துறையில் பெண்களுக்கான வேளை வாய்ப்புகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள் .

ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் K.M.V.செய்யது அப்பாஸ், அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ குத்பா பள்ளியின் தற்பொழுதைய முத்தவல்லி செய்யது பாருக் ஆலிம்,  முன்னாள்  முத்தவல்லி செய்யது ருக்னுதீன், ரியாஸ் ஆலிம் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியை ஜுபைர் தொகுத்து வழங்கினார். மேலும் கிட்டங்கி செய்யது முன்னிலை வகித்தார். கேள்வி பதில் நிகழ்சிக்கு பின் நன்றியுரை சாகுல் வழங்கி கருத்தரங்கு இனிதே முடிவுற்றது.