படிப்பில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் கீழக்கரை சகோதரிகளுக்கு விருது..

கீழக்கரை கிழக்குத் தெருவைச் சார்ந்த சாகுல் ஹமீது மகள்கள் பாத்திமா சஜிலா மற்றும் ஆயிஷத் நுஹைலா ஆகியோர் ஆவர். இந்த இரு சகோதரிகளும் சிறிய வகுப்பிலிருந்து இன்று வரை அனைத்து பாடங்கள் மற்றும் அபாகஸ் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்குகிறார்கள்.

இவர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வண்ணம் “யுவஶ்ரீ கலா பாரதி விருது” மற்றும் “சுவாமி விவேகானந்தா விருது” முறையே இருவருக்கும் வழங்கப்பட்டது.

இவ்விருது மதுரையில் உள்ள பாரதி யுவகேந்திரா சார்பாக வழங்கப்பட்டது. இவ்விருதை இவ்வமைப்பைச் சார்ந்த ஶ்ரீ சுவாமி சுப்பிரமணியம் அச்சகோதரிகளுக்கு வழங்கினார்

.