வாணியம்பாடி பகுதிகளில் தொடரும் சிறுத்தை தாக்குதல்..

சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி கவலைக்கிடம் ஆகியுள்ளது, ஆனால்  வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவத் துறை அலட்சிய போக்கையே கடைபிடித்து வருகிறது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம்அருகே மேல் அழிஞ்சி குளம் பகுதியில் சிறுத்தை தாக்கி 2 வயதான கன்றுக்குட்டி கவலைக்கிடமான நிலையில் உள்ளது.  தொடர்ச்சியாக சிறுத்தை தாக்குதலால் அப்பகுதி மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளார்கள்.