Home செய்திகள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ATMல் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்த கைப்பிடி வைக்க கோரிக்கை..

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ATMல் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்த கைப்பிடி வைக்க கோரிக்கை..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வந்த வண்ணம் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே மாற்றுத்திறனாளிகள் அலுவலகமும் செயல்படுவதால் மற்ற அலுவலகங்களை விட கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருகின்றனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்களும் பணியில் உள்ளனர், அதுமட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களும் தங்களின் பல்வேறு அலுவல் சார்ந்த வேலைகளுக்கும் ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் SBI ATM எந்த மாற்றுத்திறனாளிக்கும் பயன்படாத வகையில் நான்கு படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரிய அளவில் இன்னல்களை சந்திக்கின்றனர். தங்களின் திடீர் பணத்தேவைக்கு பணம் எடுக்க முடியாமலும் அடுத்தவரை நம்பி தனது ATM கார்டை கொடுக்க முடியாமலும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிடமும் கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களது சங்கமாகிய தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் SBI ATM ல் சாய்வுதளம் அமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் சிரமம் இன்றி பணம் எடுக்க வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திண்டுக்கல்  செய்தியாளர்:- ரியாஸ்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com