Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தள்ளாத வயதிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யும் சதம் வைத்தியர்..

தள்ளாத வயதிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யும் சதம் வைத்தியர்..

by ஆசிரியர்

தள்ளாத வயதிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் மதுரையைச் சேர்ந்த சித்த வைத்தியர் முனிசாமி.

மதுரை காளவாசல் அருகில் உள்ள சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் 85 வயதான சித்த வைத்தியர் முனிசாமி. இவர் தனது தள்ளாத வயதிலும் பல்வேறு சமூக சேவைகளும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தனது ஆரோக்யா தொண்டு நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீர் சூரணம் பாக்கெட்டுகளை இதுவரை 10,000 பேருக்கு வழங்கியுள்ளார்.மேலும் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 300 பேருக்கு அரிசி வழங்கியுள்ளார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு சுமார் 10,000 பேர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை மதுரை விராட்டிபத்தில் உள்ள ஏழை,எளிய மக்களுக்கு அரிசி வழங்கினார். தனது தள்ளாத வயதிலும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் சித்த வைத்தியர் முனிசாமியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் அஸ்வின், மகிபாலன், முரளிதரன், ஜெயந்தி, சுப்புலட்சுமி, பாபு, ஏர்வாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!