Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஆதரவற்ற குழந்தைகள் நலிவுற்ற திரைப்பட கலைஞர்கள், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் என பாதிக்கப்பட்டவர்களை தேடி உதவி செய்யும் திரைப்பட வில்லன் நடிகர்..

ஆதரவற்ற குழந்தைகள் நலிவுற்ற திரைப்பட கலைஞர்கள், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் என பாதிக்கப்பட்டவர்களை தேடி உதவி செய்யும் திரைப்பட வில்லன் நடிகர்..

by ஆசிரியர்

கொரோனா ஊரடங்கால் வறுமையில் தவிக்கும் ஏழை எளிய மக்கள் நலிவுற்ற மாற்று திறனாளிகளுக்கு உணவு, அரிசி, காய்கறி பலசரக்கு பொருள்களை வழங்கி வரும் வில்லன் நடிகர் ரம்மி சவுந்தர்.

மதுரை புதூரை சேர்ந்தவர் ரம்மி சவுந்தர், இவர் ரம்மி, ஜிகர்தண்டா, கடம்பன், சிங்கம்3 உட்பட ரம்மி ஜிகர்தண்டா திலகர் கொம்பன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கடம்பன் சிலுக்குவார் பட்டிசிங்கம் தொரட்டி சண்டிக்குதிரை பூஜை சிங்கம் 3 கள்ளாட்டம் சாமி 2 (கேடி என்ற கற்ப துறை அவார்டு படம்) 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன், சண்டை காட்சி நடிகர், கதாநாயகனின் நண்பர் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவர்.

கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நேரத்தில் இருந்து மதுரை மற்றும் சுற்று பகுதிகளில் இருந்த திரைப்பட துணை நடிகர்கள், நாடக நடிகர்களில் நலிவுற்றிருந்தவர்களை, திருநங்கைகள் என அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகளை தினமும் சுமார் 100 பேருக்கு வழங்கி வருகிறார்..

மேலும் இன்று (19/05/2020) மதுரை மாடக்குளம், திருநகர், அண்ணாநகர் புதூர் பகுதியினை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு அவர்களின் தேவைகளுக்கேற்ப அரிசி, எண்ணெய், பருப்பு, பலசரக்கு உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.

கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை சுமார் ஆயிரம் நபர்களுக்கு மேலே உணவு வீட்டு சாமான்களை தொடர்ந்து வழங்கி வருகிறார் ரம்மி சவுந்தர். இதுபோன்ற உதவிகளை தான் தனது மனைவி உதவியுடன் சமூக இடைவெளியை பின்பற்றி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தனியே சென்று உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார் இவர் வழங்கக்கூடிய உதவிகளுக்கு எந்த விளம்பர வெளிச்சமும் இதுவரையும் தேட விரும்பவில்லை

குறிப்பாக ஆதரவற்ற மாணவ மாணவிகள் இருக்கும் இல்லங்களுக்கு சென்று நேரடியாக உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதுவரையிலும் யாரிடமும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக எந்த உதவியும் பெறாமல் தனது சொந்த பணத்திலேயே தொடர்ந்து வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!