Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கடையம் வனச்சரகத்திற்குற்பட்ட பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் மிளா வேட்டையாடி கொன்று சமைத்தவர்கள் கைது…

கடையம் வனச்சரகத்திற்குற்பட்ட பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் மிளா வேட்டையாடி கொன்று சமைத்தவர்கள் கைது…

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கடையம் வனச்சரகத்திற்குற்பட்ட பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் மிளா வேட்டையாடி கொன்று சமைத்தவர்கள் கைது செய்யபட்டுள்ளனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட கடையம் வனச்சசரகத்தை சேர்ந்த பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த மிளா ஒன்றை சிலர் வேட்டையாடியதாக வந்த தகவலையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய துணை இயக்குனர் ஓம்காரகொம்மு IFS உத்தரவின் பேரில் கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் தீவிர விசாரணை செய்ததில் சிலர் மிளா வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டு கார்த்திக், அமிர்தலிங்கம், சங்கர் விநாயகமூர்த்தி, சுடலைமுத்து ஆகிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சமீப காலமாக. கடையம் வனப்பகுதிக்குள்களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய துணை இயக்குனர் ஓம்காரகொம்மு IFS மற்றும் கடையம் வனச்சரகராக நெல்லை நாயகம் ஆகியோர் வேட்டை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது என வன உயிரின ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.

கடையம்: பாரதி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com