Home செய்திகள்உலக செய்திகள் ஜெர்மனியில் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில் பதக்கம் வென்றவருக்கு உசலம்பட்டியில் உற்சாக வரவேற்பு..

ஜெர்மனியில் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில் பதக்கம் வென்றவருக்கு உசலம்பட்டியில் உற்சாக வரவேற்பு..

by ஆசிரியர்

ஜெர்மனி நாட்டின் காலணே நகரில் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது., இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் 7 தடகள வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்., இந்த ஏழு பேருக்கும் தமிழ்நாடு அரசு இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான ஊக்கத் தொகையையும் வழங்கி அனுப்பி வைத்திருந்தது.எடை, வயது, உடல்வாகு உள்ளிட்ட மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த போட்டியில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற வீரர் மூன்றாவது பிரிவில் வட்டு எரிதல், ஈட்டி எரிதல், குண்டு எரிதல் போட்டியில் மூன்றிலும் மூன்று தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் இவர் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்தார். உசிலம்பட்டி தேவர் சிலை அருகே மாதரை கிராம மக்கன் மற்றும் அவரது உறவினர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.முன்னதாக தடகள வீரர் கணேசனுக்கு மாலை அணிவித்து தங்கள் தோளில் தூக்கிச் சென்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக மாதரை கிராமம் வரை அழைத்துச் சென்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!