Home செய்திகள் கடையநல்லூர் ஐடிஐ சேர்க்கை தேதி நீட்டிப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்..

கடையநல்லூர் ஐடிஐ சேர்க்கை தேதி நீட்டிப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்களுக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடையநல்லூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் நேரடி சேர்க்கை 15-09-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற்நுட்ப மையம் 4.0-ல் ஈராண்டு தொழிற் பிரிவுகளான ADVANCED CNC MACHINING TECHNICIAN (மேம்படுத்தப்பட்ட CNC இ.யந்திர தொழில்நுட்ப வல்லுநர்) MECHANIC ELECTRIC VEHICLE (கம்மியம் மின்சார வாகனம்) மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவான INDUSTRIAL ROBOTICS AND DIGITAL MANUFACTURING TECHNICIAN (தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநர்) விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடையநல்லூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் அணுகவும். பயிற்சியில் சேரும் பயிற்சியாளருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ750 அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும், மிதிவண்டி, சீருடைகள், தையல் கூலி, மூடுகாலணிகள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உள்ளது.

பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐ.டி.ஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ் & ஆங்கிலம்) மட்டும் எழுதி 12- ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் எட்டாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ் & ஆங்கிலம்) மட்டும் எழுதி 10-ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு மீனாட்சி, முதல்வர், தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர், பண்பொழி ரோடு (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கடையநல்லூர் அருகில்) தொலைபேசி எண் 04633-290270 ல் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!