Home செய்திகள் மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..

மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..

by ஆசிரியர்

மதுரை மாநகர் காளவாசல் சாலை சந்திப்பில் மேம்பால பணிகள் மற்றும் பாலத்தின் உத்திரங்கள் (Girder) தூக்கி வைக்கப்படும் பணிகள் நடைபெற உள்ளதால் காளவாசல் சந்திப்பிலிருந்து சண்முகா தியேட்டர் வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, இலகுரக மற்றும் கனரக வாகனங்களின் வழித்தடங்கள் 11.06.2019 ம் தேதி முதல் 30.06.2019 ம் தேதி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விபரங்கள் கீழே உள்ளவாறு:-

  • சண்முகா தியேட்டர் வழியாக குரு தியேட்டர் நோக்கி செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலை மூடப்படுவதால் காளவாசல் சந்திப்பு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அவ்வழியாக செல்ல அனுமதி இல்லை.
  • .காளவாசல் சந்திப்பு வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் இலகுரக வாகனங்கள் காளவாசல் சந்திப்பு, அரசரடி சந்திப்பு, AA ரோடு, ஞானஒளிபுரம் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி DD ரோடு வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கிச் செல்ல வேண்டும்.
  • .மேற்படி சந்திப்பு வழியாக வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் காளவாசல் சந்திப்பு, அரசரடி சந்திப்பு, புதுஜெயில் ரோடு, மேலப் பொன்னகரம் சாலை, கரிமேடு காவல் நிலைய சாலை, சோனையார் கோவில் சந்திப்பு (ஆரப்பாளையம் ரவுண்டானா) வழியாக செல்ல வேண்டும்.
  • .குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து காளவாசல் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் அதே சாலையில் மேற்குபுற மாற்று சாலையில் உள்ள வழித்தடம் வழியாக காளவாசல் சிக்னல் வந்து பிரிந்து செல்ல வேண்டும்.
  • .பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குரு தியேட்டர் சந்திப்பு செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் அரசரடி சந்திப்பு, AA ரோடு, DD ரோடு வழியாகவும், கனரக வாகனங்கள் காளவாசல் சந்திப்பு – அரசரடி சந்திப்பு – புதுஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம் சாலை, ஆரப்பாளையம் ரவுண்டானா வழியாகவும் செல்ல வேண்டும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!