Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்!

இராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்!

by ஆசிரியர்
இராமநாதபுரத்தில்    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம்  வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இராமநாதபுரம்  ஏபிசி மகாலில்  நடைபெற்றது.
இந்த ஆலோசனை  கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.   இதில கழக  தென் மண்டல செயலாளர்  தங்க தமிழ் செல்வன் கலந்து கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தீவிரமாக உறுப்பினர் சேர்க்க ஒன்றிய,  நகர, பேரூர்,  ஊராட்சி,  கிளை கழக நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட்டு கழகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதை என்பது   குறித்து விளக்கிப் பேசினார். மேலும் இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பு தொகுதி பொருப்பாளர்கள் இராமநாதபுரம்    முன்னாள் அமைச்சர்  ராதாகிருஷ்ணன், திருவாடானை இறகுசேரி எம்.முருகன்,    பரமக்குடி     சுப்பிரமணியன் ,   முதுகு  ளத்தூர் முத்து  ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.
மேலும் தென்மண்டல பொருப்பாளர் தங்கதமிழ் செல்வன் பேசியதாவது,           சட்டசபையில் நம்பிக்கை   ஓட்டெடுப்பு    நடைபெற்ற போது ஓட்டை மாற்றி போட்டவர் ஒ.பன்னீர்செல்வம் என்பது தலைமை நீதிபதி க்கு தெரியும். அப்படித் தெரிந்தே அவருக்கு ஆதரவான தீர்ப்பை சொல்கிறார். நான் உட்பட 18 பேரும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தான் வைத்தோம். அதுவும் நீதிபதிக்குத்தெரியும் . ஆனால் எங்களுக்கு எதிராக மாறுபட்ட தீர்ப்பை சொல்கிறார். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்ககூடாது என்பதால் நான் அதைப்பற்றி பேசவில்லை. இருப்பினும் நீதிமன்றத்தை நம்பி  இனி பிரயோஜனம் இல்லை என்பதால் நான் மேல் முறையீடு செய்யவில்லை. எனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தேன். பாதிக்கப்பட்ட   18 பேரில் நானும் ஒருவன்.  உளவுத்துறை பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறது.    பெண் வழக்கறிஞர்  கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். தலைமை நீதிபதி செயல்பாடு சரியில்லை என சக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனரே. அதன் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை. தலைமை நீதிபதி தீர்ப்பு என்னை பொருத்தவரை ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.  அதனால் வரும் அத்தனை வழக்குகளையும் சந்திக்கத்தயார்.
அதேபோல் 17 பேர் மேல் முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட் 3 வது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமித்துள்ளது. அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். உறுப்பினர் சேர்க்கை விரிவு படுத்தி புதிய நிர்வாகிகள்   விரைவில்  நியமிக்கப்படுவர். தோல்வி பயத்தால்  உள்ளாட்சி தேர்தலை ஆட்சியாளர்கள் நடத்த மாட்டார்கள். நாடாளுமன்றம்தேர்தல்   வரும்போது பா.ஜ.க வுடன் அதிமுக கூட்டணி  வைத்தால்,  அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் 39 தொகுதிகளிலும்  மாபெரும் வெற்றி பெரும். அதனை தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் மாபெரும் வெற்றி பெற்று டி.டி.வி.தினகரன் முதல்வராவது உறுதி. இது காலத்தின் கட்டாயம் இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் வ.து.நடராஜன், ஜி.முனியசாமி, சோமாத்தூர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் முருகன், இராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் முத்தீஸ்வரன், மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் ஸ்டாலின், கடலாடி ஒன்றிய கழக செயலாளர் பத்மநாபன்,  போகலூர் ஒன்றிய கழக செயலாளர் ராஜாராம் பாண்டியன்,  சாயல்குடி ஒன்றிய செயலாளர் பச்சைக்கண்ணு,  கீழக்கரை நகர் செயலாளர் சுரேஷ், மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் ஆர்.கே.ரம்லி,  மண்டபம் பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்ட கழக, ஒன்றிய கழக,  நகர்கழக, பேரூர், ஊராட்சி,  கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  ஏராளமானோர்  கலந்து கொண்டனர். இராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் முத்தீஸ்வரன் நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com