மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அழகு சிறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா மகள் என்று கூறிக்கொள்பவரும் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக்கழகத் தலைவருமான ஜெயலட்சுமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அன்னதான நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது அம்மாவுக்கு ஏழை குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.இங்குள்ளவர்கள் அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன்.அம்மா வழியில் ஏழைகளுக்கு நானும் உதவிகள் செய்வேன். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனியில் சுயேட்ச்சையாக போட்டியிடுவதாகவும் பல்வேறு உருட்டல் மிரட்டல் வந்தாலும் நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை எனவும் கட்சிப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கட்சி சின்னத்தை அரசு தடை செய்து இருப்பதாகவும் கூடிய விரைவில் அதை மீட்டெடுத்து மாபெரும் வெற்றி கண்டு அம்மா துணையுடன் ஆட்சி புரிவேன் என ஜெயலலிதா மகள் என்று கூறும் ஜெயலட்சுமி செய்தியாளருக்கு பேட்டியளித்துள்ளார்.
உசிலை மோகன் 117
You must be logged in to post a comment.