கீழக்கரையில் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்ட விளம்பர பதாகைகள் வைப்பதில் பின்பற்ற வேண்டிய அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (21.02.13) நடந்தது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி தலைமை வகித்தார். கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தல். வன்முறையை தூண்டும் வாசகங்கள், அரசு அலுவலங்கள், வழிபாட்டு தலங்கள் முன் எவ்வித விளம்பர பதாகை வைக்கக் கூடாது, இவ்விதிகள் மீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேனர்கள் வைக்கும் அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் மண்டல சிறப்பு தாசில்தார் ஜலால்தீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, துப்புரவு மேற்பார்வையாளர் மனோகரன், நகர கட்டமைப்பு மேற்பார்வையாளர் பார்த்தசாரதி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

#Paid Promotion