இராமநாதபுரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்..

இராமநாதபுரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

மண்டபம் ஒன்றிய   அண்ணா திராவிட முன்னேற்றக் கழக    ஆலோசனை கூட்டத்தை முன்னிட்டு ராமநாதபுரம் பாரதி நகரில் இருந்து மாவட்ட  அம்மா பேரவை துணை  செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி       சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராமநாதபுரம் பாரதி நகர் பஸ் ஸ்டாப் அருகே அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

இணைந்த அனைத்து இளைஞர்களும் உச்சிப்புளியில்   நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வகையில்   இரு சக்கர வாகன எழுச்சி  பேரணி நடத்தினர்.    இப்பேரணியை மாண்புமிகு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.  இப்பேரணி மண்டபம் மெயின்ரோடு வழியாக வழுதூர் பெருங்குளம், நாகாச்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி யில் உள்ள கிராம பொதுமக்களை சந்தித்து அரசின் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கமாக எடுத்துரைத்து  உச்சிப்புளி சென்றடைந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில்  இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.