Home செய்திகள் உச்சிப்புளியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் !

உச்சிப்புளியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மானாங்குடி கிராமத்தில்  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு காரீப் பருவ  பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப  மேலாளர் பானுமதி தெரிவிக்கையில் , முதலமைச்சரின் மண்னுயிர் காத்து மண்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர  விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்  வழங்கப்படும் மானிய திட்டங்கள்  குறித்து விளக்கிப் பேசினார். மேலும் விவசாயிகளுக்கு கோடை உழவு ,மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், உழவன் செயலியின் பயன்பாடு, உயிர் உரங்களின் பயன்பாடு, அங்கக பண்ணையில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார. மேலும் இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப கருத்துக்களை உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் விளக்கி கூறினார் . பயிற்சிக்கான ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். முகாமில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com