தொண்டி அருகே வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து, 15 பேர் படுகாயம்… தனியார் மருத்துவமனையில் அனுமதி..

இன்று (26-02-2017) காலை தொண்டி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

அந்த வேனில் பயணம் செய்த 15 பேர் காயத்துடனும், 15 பேர் படுகாயத்துடனும் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  பின்னர் அங்கு பரிந்துரை செய்ததின் பேரில் இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் திருமண விசேஷத்திற்காக சென்று கொண்டிருந்தார்கள் என்று அறியப்படுகிறது.  மேலும் விபத்து நடந்த இடத்துக்கு தமுமுக அமைப்பினர் விரைந்து சென்று அனைத்து முதலுதவிகளும் செய்தனர்.  இந்த விபத்து சம்பந்தமாக தொண்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..