உச்சிப்புளி அருகே விபத்தில் சகோதரர்கள் பலி 5 பேர் படுகாயம்..

இராமேஸ்வரத்தில் இருந்து சுவாமி தரிசனம் முடித்து விட்டு தென்காசி சென்ற ஆம்னி கார் மீது செங்கல் ஏற்திச் சென்ற லாரி மோதியது. நெல்லை மாவட்பம் தென்காசி அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் ராமேஸ்வரம் கோயிலுக்கு சுவாமி கும்பிட காரில் நேற்று வந்தனர். தரிசனம் முடித்து விட்டு தென்காசி திரும்பினர். உச்சிப்புளி அருகே சாத்தக்கோன் வலசை பகுதியில் சென்றபோது, தினைகுளத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரியும் மோதியது.

இந்த விபத்தில் காரில் சென்ற தென்காசி இசக்கி மகன்கள் குட்டி (26), மஹாராஜா (25) சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் படுகாயம் அடைந்த 5 பேர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.. .இது தொடர்பாக லாரி டிரைவர் புத்தேந்தல் மாதவனை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.

#Paid Promotion