Home அறிவிப்புகள் நாளை (20-01-2018) பள்ளிகளுக்கான மணிசட்டம் (Abacus) போட்டி..

நாளை (20-01-2018) பள்ளிகளுக்கான மணிசட்டம் (Abacus) போட்டி..

by ஆசிரியர்

ஏ மாஸ் ( amas – Abacus Mental Arithmetic System) என்பது‌‌ அபாகஸ் மன கணித அமைப்பு  என்பதாகும். நான்கு வயதில் இருந்தே குழந்தைகளின் அறிவாற்றலை பன்மடங்கு பெருக்குகிறது. அபாகஸ் ( மணிச் சட்டம்) எனும் கருவியின் மூலம் கூட்டல் ,கழித்தல், பெருக்கல் , வகுத்தல் கணக்குகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ‌

நாளை (20/1/2018) கீழக்கரை Pearl matric Hr. Sec school_ல் மாவட்ட அளவிலான இரண்டாவது அபாகஸ் போட்டி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அளவில் 12 பள்ளிகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 900 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதனை வள்ளல் சீதக்காதி அறக்கட்டளை சார்பாக நடத்த உள்ளனர். இதில் அனைத்து பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ஏ மாஸ் அபாகஸ் பயிற்சியின் இயக்குனர் A.உமர் சரிப் Msc,B.Ed, மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

TS 7 Lungies

You may also like

1 comment

Jamaludeen January 20, 2018 - 3:25 pm

Wow nice Event

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!