Home செய்திகள் வாரனாசியிலிருந்து தமிழக அரசு தமிழர்களை அழைத்து வந்தது போல் டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்களையும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தனி பேருந்துகள் மூலம் உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டுகிறேன்:- ஆம் ஆத்மி வசீகரன் அறிக்கை..

வாரனாசியிலிருந்து தமிழக அரசு தமிழர்களை அழைத்து வந்தது போல் டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்களையும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தனி பேருந்துகள் மூலம் உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டுகிறேன்:- ஆம் ஆத்மி வசீகரன் அறிக்கை..

by Askar

டெல்லியில் மருத்துவ கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்கள் விஷயத்தில் தமிழக முதல்வர் அரசியல் செய்ய வேண்டாம்!

வாரனாசியில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்க்கு அழைத்து வந்தது போல் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பாதுகாப்பில் சிகிச்சை முடிந்து குணமடைந்து இருப்பவர்களை தமிழத்திற்கு அழைத்து வர தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 560 பேர் டெல்லியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் 80சதவீதத்திற்கு மேற்பட்டோர்க்கு குரானா பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்துள்ளது . அதை தொடர்ந்து இவர்கள் முழுமையாக குணமடைந்து உள்ளனர். குனமடைந்தவர்கள் தமிழகம் வர முடியாதததால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாகியுள்ளனர் அதனால் இறப்புகளும் நேரிடுகிறது.

டெல்லி மாநில அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்ததோடு அடுக்குமாடி குடியிருப்பில் டெல்லியின் நான்கு பகுதிகளில் ஒரு விட்டில் இரண்டு பேர் வீதம் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு முறையே உணவு, குடிப்பதற்கு வெந்நீர் உட்பட அவர்களுக்கு தேவையான அத்தியாவிசய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல தங்குமிடம், உணவு எதிலும் குறைவில்லை நல்லபடியாக உள்ளோம் ஒரு சில குடியிருப்பில் மின்விசிறி வசதி இல்லை என்று என்னிடம் தனிமைபடுத்த பட்டுள்ள நம் தமிழர்கள் சொன்னார்கள் பின் நான் டெல்லியில் மாநில நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன் பின்னர் அவர்களுக்கு மின் விசிறியுடன் கூடிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்டார்கள்.

டெல்லி மாநிலம் மருத்துவ சேவையில் முதன்மை மாநிலமாகும். டெல்லியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலத்திலிருந்து வந்துள்ள மக்களும் இங்கு பெருமளவில் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் தங்குமிடம் மருத்துவம், உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறைகள் இருந்தால் உரியவர்களிடம் தெரிவித்தால் சரி செய்யப்படுகிறது..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று டெல்லி முதல்வர் திரு.அரவிந்த கெஜ்ரிவால் அவர்களுக்கு டெல்லியில் மருத்துவ பாதுகாப்பில் இருக்கும் தமிழர்கள் குறித்து கடிதம் எழுதியுள்ளது வரவேற்கதக்கது.

அதே நேரத்தில் குனமடைந்தவர்களை தமிழகத்திற்கு அழைத்தவர ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு தான் அனுமதி தர முடியும். உன்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறையுடன் செயல்படும் தமிழக அரச என்றால் அவர்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதே சரியானது.

தமிழகத்திலும் குணமடைந்தவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் டெல்லியில் குணமடைந்த தமிழர்கள் 2 மாதத்திற்கு மேலாக அங்கு தனிமைபடுத்தியே வைக்கப்பட்டுள்ளனர். வாரனாசியிலிருந்து தமிழக அரசு தமிழர்களை அழைத்து வந்தது போல் டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்களையும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தனி பேருந்துகள் மூலம் உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டுகிறேன்.

S.A.N.வசீகரன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆம்ஆத்மிகட்சி தமிழ்நாடு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!