Home செய்திகள் வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி; உசிலம்பட்டியில் முழு கடையடைப்பு போராட்டம்

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி; உசிலம்பட்டியில் முழு கடையடைப்பு போராட்டம்

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படுவது 58 கிராம கால்வாய் ஆகும்.கால்வாயில் தண்ணீர் வந்தால் 58 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இதில் வைகை அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும்.ஆனால் இந்த வருடம் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.இதனால் விவசாய சங்கத்தினருடன் அனைத்து கிராம மக்;;;;களும் இணைந்து கடந்த டிசம்பர் 1 ம் தேதி உண்ணாவிரதப்; போராட்டம் நடத்திய போதும் தண்ணீர் திறக்கப்படவில்லை.இந்நிலையில் தண்ணீர் திறக்காமல் கால தாமதப்படுத்தி வரும் தமிழக அரசைக் கண்டித்தும் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் உசிலம்பட்டியில் ஒருநாள் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.மேலும் ஆட்டோக்கள் லாரிகள் இயங்கவில்லை.இதனால் பரபரப்பாக காணப்படும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை ஐவுளிக்கடை பஜார் நகைக்கடை பஐhர் போன்ற பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வர்த்தகர் சங்கம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினரும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன.இதே போன்று வழக்கறிஞர் சங்கமும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளனர்., வாடகை ஆட்டோ மற்றும் கார் ஓடவில்லை.,

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!