Home செய்திகள் தென்காசியில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்..

தென்காசியில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்..

by mohan

மே.28 அகில இந்திய கோரிக்கை தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில், தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட தலைவர் மு. திருமலை முருகன் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்,அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர் பி.செவிலியருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட சரண் விடுப்பு அக விலைப்படி உடன் வழங்கப்பட வேண்டும்,

மத்திய மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடன் நிரப்பப்பட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தர்ணா போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ரா.ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் க.துரைசிங் கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தை தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி நாயனார் துவக்கி வைத்தார். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் K மாரியப்பன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட பொருளாளர் தர்மராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் பீ.ராஜசேகர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பூ.சரஸ்வதி, தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் க.மார்த்தான்ட பூபதி, தமிழ்நாடு சுருக்கெழுத்து தட்டச்சர் சங்க மாநில தலைவர் P.K.மாடசாமி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் த.சேகர், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் வே.வெங்கடேஷ், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் சே. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் R. பாபுராஜ் ஆகியோர் போராட்டத்தில் வாழ்த்தி பேசினர். மாநில துணை பொதுச் செயலாளர் N. வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சு,வேல்ராஜன் நன்றியுரையாற்றினார். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!