Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.17 லட்சம் ஐந்து வயது குழந்தைகளுக்கு நாளை
போலியோ சொட்டு மருந்து:
மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தகவல்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.17 லட்சம் ஐந்து வயது குழந்தைகளுக்கு நாளை
போலியோ சொட்டு மருந்து:
மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தகவல்.

by mohan

போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும்போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இம்முகாமில் பிறந்தது முதல் 5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்துவழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலைஉருவாகியுள்ளது. இந்நிலை தொடர, 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும்போலியோ சொட்டு மருந்து 27.02.2022 ல் கூடுதலாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கதிட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்முகாமின் மூலம் 1,16,838 குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பிறந்தது முதல் 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பல்வேறுமாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல், நரிக்குறவர்குடியிருப்புகள், இலங்கை தமிழர் மறுவாழ்வு குழயிருப்புப் பகுதி ஆகியோரின் குழந்தைகளுக்கும்சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த சொட்டு மருந்து, அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரநிலையங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள்இ பள்ளிகள் என 1,125மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் இதைத் தவிர்த்து 9 நடமாடும் குழுக்கள்மூலம் பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் என 26 இடங்களில் என1,260 போலியோ முகாம்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்படும். காலை 7மணி முதல்மாலை 5மணி வரை வழங்கப்படும்.இந்த சொட்டு மருந்து பணியை கண்காணிக்க பொது சுகாதார துறை இயக்குநர்அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறைமூலம் 12 மேற்பார்வையாளர்களும்,ஆரம்ப சுகாதாரநிலையஅளவில் 139மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப் பணியில் சுகாதார துறை மூலம் 637பணியாளர்களும், சத்துணவு துறை மூலம்1,668 பணியாளர்களும், 109 பள்ளி மாணவர்களும்,தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 2,545 பணியாளர்கள் உட்பட 5,010 பணியாளர்கள்ஈடுபடுத்தப்பட உள்ளனர்.எனவே இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும்நாளை (27.02.2022) நடைபெறவுள்ள சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்டஅனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு போலியோ நோயைமுழுமையாக ஒழிக்க வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால்குமாவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!