Home செய்திகள் மொபைல் புளூடூத் மூலம் தகவல் திருட்டு; தென்காசி சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..

மொபைல் புளூடூத் மூலம் தகவல் திருட்டு; தென்காசி சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..

by mohan

மொபைல் புளூடூத் மூலம் தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தென்காசி சைபர் கிரைம் காவல்துறையினர் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் “Blue Bugging என்ற Hacking” முறை குறித்து தென்காசி சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாக சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 05.02.2022 சனிக்கிழமை தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடம் சைபர் க்ரைம் காவல்துறையினரால் Blue Bugging என்று அழைக்கப்படும் சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த Blue Bugging உங்கள் தொலைபேசியில் உள்ள Blutooth ஐ குற்றவாளிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களையும் திருடுகிறார்கள்.இது நடக்காமல் தடுப்பதற்கு அனைவரும் தேவையற்ற நேரங்களில் Blutooth ஐ கட்டாயம் OFF செய்ய வேண்டும் எனவும், மேலும் தேவைக்கு மட்டுமே Blutooth Make Phone Visible ஐ ON செய்ய வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 155260 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!