Home செய்திகள் 15 வேறுபட்ட வால்வெள்ளிகள் மற்றும் விண்மீனின் உயர்ந்த துல்லிய இயக்கத்தைக் கண்டுபிடித்த எட்வார்டு எமர்சன் பர்னார்டு நினைவு தினம் இன்று (பிப்ரவரி 6, 1923).

15 வேறுபட்ட வால்வெள்ளிகள் மற்றும் விண்மீனின் உயர்ந்த துல்லிய இயக்கத்தைக் கண்டுபிடித்த எட்வார்டு எமர்சன் பர்னார்டு நினைவு தினம் இன்று (பிப்ரவரி 6, 1923).

by mohan

எட்வார்டு எமர்சன் பர்னார்டு (Edward Emerson Barnard) டிசம்பர் 16, 1857ல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார். இவரது தந்தiயார் இரியூபன் பெர்னார்டு. தாயார் கேவுட் எனப்படும் எலிசபெத் ஜேன் பர்னார்டு. இவர் பிறப்பதற்கு மூன்று மாத்த்துக்கு முன்பே இவரின் தந்தையார் இறந்துவிட்டுள்ளார். எனவே இவர் வறுமையான குடும்பத்தில் வளர்ந்துள்ளார். இதனால் இயல்பான முறைசார் கல்விஏதும் இவர் பயிலவில்லை. இவரின் முதல் ஆர்வல் ஒளிப்படவியலில் கவிந்தது. அதனால் இவர் ஓர் ஒளிப்படவியலாரின் உதவியாளராகத் தன் ஒன்பதாம் அகவையில் பணிபுரிந்துள்ளார். இவர் பின்னர் வானியலில் ஆர்வத்தை வளர்த்துகொண்டார். இவர் 1876ல் ஐந்து அங்குல ஒளிவிலகல்வகைத் தொலைநோக்கியை வாங்கியுள்ளார். இவர் 1881ல் முதல் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை அறிவிக்கத் தவறியுள்ளார். இவர் அடுத்த வால்வெள்ளியைப் பின்னர் அதே ஆண்டிலும் 1992ல் மூன்றாம் வால்வெள்ளியையும் கண்டுபிடித்தார்.

ஒளிப்படத் தொழிலில் இருந்தபோதே 1881ல் ஓர் ஆங்கிலேயப் பெண்ணான உரோடா கால்வர்ட்டை மணந்துள்ளார். அல்பெர்ட் ஆரிங்டன் வார்னர் 1880களில் 200 டாலர் புது கோளைக் கண்டுபிடிப்பவருக்கு வழங்கியுள்ளார். எட்வார்டு ஐந்து கோள்களைக் கண்டுபிடித்துள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டு இவர் தனக்கும் தன் புது மனைவிக்கும் ஒரு புதிய வீட்டைக் கட்டியுள்ளார். நாழ்சுவில்லி பயில்நிலை வானியலாளருக்கு இவர் அறிமுகமாகியதும் அவர்கள் ஒருதொகையைத் திரட்டி இவரை வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க நல்கையாக வழங்கியுள்ளனர். இவர் பள்ளியில் படிக்கவில்லை. ஆனால் இவருக்கு முன்பு எவருக்கு வழங்கப்படாத வாண்டர்பில்டின் தகைமைப் பட்டம் வழங்கப்பட்டிருந்தது. இவர் இலிக் வான்காணகத்தில் 1887ல் சேர்ந்தார். பின்னர் இவர் அதன் இயக்குநரான எட்வார்டு எசு. கோல்டன் அவர்களுடன் பெரிய வானியல் கருவிகளைப் பயன்படுத்த அணுகவும் பிற ஆய்வு, மேலாண்மைப் பணிகளிலும் மோத நேர்ந்துள்ளது.

பர்னார்டு 1889ல் இயாபேதசு நிலா காரிக்கோளின் வலயங்களைக் கடத்தலைக் கண்ணுற்றார். காரிக்கோளுக்கும் அதன் உள்வலயதுக்கும் இடையே உள்ள வெளியில் இயாபேதசு கடப்பதைப் பார்த்தபோது, நிலா மீது ஒரு நிழல் கடந்து செல்வதையும் கண்டுள்ளார். உடனே அதை அவர் உணராவிட்டாலும், இவர் காரிவலயம் உள்ளதற்கான சான்றாக்க் கருநிழல் வலயங்களின் வட்டவடிவத் தடங்களுக்குச் செங்குத்தாக அமைதலைக் கண்டுபிடித்துள்ளார். இவை முதலில் ஐயத்துக்கு ஆட்பட்டாலும் வாயேஜர்-1 விண்கலம் இதை உறுதிப்படுத்தியது. 1881 முதல் 1892 வரை இவரால் கண்டுபிடிக்கப்பட்ட 15 வேறுபட்ட வால்வெள்ளிகள், இவற்ரில் மூன்று பருவமுறையின. மேலும் இவர் பிறருடன் இணைந்து இருகோள்களைக் கண்டுபிடித்துள்ளார். இவர் ஒரு தகைமையுள்ள நோக்கீட்டு வானியலாளர். இவர் 1916 இல் பர்னார்டு விண்மீனின் உயர்ந்த துல்லிய இயக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக பரவலாக அறியப்பட்டார்.

அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1897), பிரான்சின் உயர்விருதான பிரிக்சு ஜான்சன் பரிசு (1906), புரூசு பதக்கம் (1917) போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார். பர்னார்டு (நிலாக் குழிப்பள்ளம்), பர்னார்டு (செவ்வாய்க் குழிப்பள்ளம்), கனிமீடு நிலாவின் பர்னார்டு பகுதி, குறுங்கோள் 819 பர்னார்டியானா, NGC 6822 பர்னார்டு பால்வெளி, பர்னார்டு கண்ணி, பர்னார்டு விண்மீன், பர்னார்டு முற்ரம், வாண்டெர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உறைவிடுதி, பர்னார்டு வானியல் கழகம் போன்றவை இவர் நினைவாக பெயர் இடப்பட்டுள்ளது. விண்மீனின் உயர்ந்த துல்லிய இயக்கத்தைக் கண்டுபிடித்த எட்வார்டு எமர்சன் பர்னார்டு பிப்ரவரி 6, 1923ல் தனது 65வது அகவையில் வில்லியம்ஸ் பே, விஸ்கான்சின்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!