இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து பெண்ணுக்கு கையில் எலும்பு முறிவு.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் இருந்து ஹெச் எம் எஸ் காலனியை சேர்ந்த சங்கர் வயது 27 இவரது சகோதரி சித்ரா24 பழங்காநத்தம் பகுதியில் இருந்து மருத்துவரை பார்க்க சென்றுவிட்டு மருத்துவர் இல்லாத காரணத்தினால் மருத்துவர் மற்ற மருத்துவமனைக்கு பைபாஸ் ரோடு போடியில் லயன் மேம்பாலத்தில் வழியாக வந்து கொண்டு இருந்தார் அப்பொழுது நேரு நகர் நோக்கி ஒரு இருசக்கர வாகனம் வலதுபுறமாக திடீரென திரும்பியது அப்பொழுது நிலைதடுமாறி இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது பின்னால் அமர்ந்திருந்த சங்கர் மற்றும் அவரது சகோதரி சித்ரா எதிர்திசையில் வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியும் நிலைதடுமாறி கீழே விழுந்தன இதில் சித்ரா இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் இரண்டு வாகனங்களில் கைப்பற்றி விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இப்பகுதியில் தொடர்ந்து அடிக்கடி விபத்து ஏற்படுவதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்