மழையால் சேதமடைந்த சாலைகளுக்கு அமைச்சர்களின் முயற்சியால் நிரந்தர தீர்வு- மாநகராட்சி ஆணையாளர் தகவல்:

மதுரையில் நடந்த அரசு விழாவில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ,மதுரை மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்கஅமைச்சர் பெருமக்களின் முயற்சியால், கடந்தமூன்று மாதங்களில் மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாகரூ.60 கோடி தமிழக அரசிடமிருந்து பெற்று தந்து உள்ளார்கள்.அதன்படி, முதற்கட்டமாக மாநகராட்சியின் முக்கிய சாலைகளைசீரமைக்க ரூ.20 கோடிக்கு பணிகள் நடைபெற உள்ளது.இவ்வாறு மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 300சாலைகள் சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது.மேலும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ரூ.15 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவ்வாறு சுகாதாரப்பணிகளுக்காக தளவாட சாமான்கள், குப்பை அள்ளும்வாகனங்கள், இயந்திரங்கள், டம்பர் பின்கள் உள்ளிட்ட பல்வேறுபொருட்கள் வாங்கப்பட உள்ளது.மேலும் , தமிழக முதல்வர்,உத்திரவின்படி, வைகை தென்கரை மற்றும் வடகரை,விரிவாக்கப்பட்ட பகுதிகள், திருப்பரங்குன்றம், திருநகர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை விரைந்துஅமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு,மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் யாவும் விரைந்துமுடித்திடவும் மற்றும் நிரந்தர தீர்வு காணும் விதமாக பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்