ராசக்காபட்டியில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது..

தமிழக முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவமுகாம்கள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராசக்காபட்டி கிராமத்தில் மருத்துவமுகாம் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு ராசக்காபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா பால்ராஜ் தலைமை தாங்கினார்.

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் ரஞ்சனி சுதந்திரம் முகாமினை துவக்கி வைத்தார்.முகாமில் சர்க்கரை நோய் இருதயநோய் மனநோய் மகப்பேறு மருத்துவம் சித்த மருத்துவம் உள்பட அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது..உசிலம்பட்டி வட்டார மருத்துவ அலுவர் சுசிலா தலைமையில் பல்வேறு துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று கிராமமக்களுக்கு சிகிச்சை அனித்தனர்.இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.